மக்களே!… இன்றே கடைசி நாள்!… சேமிப்பு திட்டம் முதல் மானியம் வரை!… இதையெல்லாம் செய்துவிட்டீர்களா?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF), செல்வமகள் சேமிப்புத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வோர் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை முதலீடு செய்ய வேண்டும். தற்போது 2023-24 நிதியாண்டு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இதுவரை குறைந்தபட்ச தொகையை முதலீடு செய்யாதவர்கள் உடனடியாக (மார்ச் 31) இன்றுக்குள் முதலீடு செய்துவிட வேண்டும். இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
பி.பி.எப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். (மார்ச் 31) இன்றுக்குள் குறைந்தபட்ச 500 ரூபாய் தொகையை முதலீடு செய்யாவிட்டால் கணக்கு செயலற்றதாக இருப்பதாகக் கருதப்படும். கணக்கை மீண்டும் செயல்படுத்த 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் 250 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். (மார்ச் 31) இன்றுக்குள் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதலீடு செய்யாவிட்டால் கணக்கு செயலற்றதாகக் கருதப்படும். கணக்கை மீண்டும் செயல்படுத்த குறைந்தபட்ச டெபாசிட் தொகையுடன் 50 ரூபாய் அபராதமும் சேர்த்து செலுத்த வேண்டும்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டும். (மார்ச் 31) இன்றுக்குள் குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாய் செலுத்தாவிட்டால், பின்னர் கணக்கை மீண்டும் செயல்படுத்த 100 ரூபாய் அபராதம் சேர்த்து செலுத்த வேண்டும்.
இந்தியாவில் மக்கள் பலர் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் எரிவாயு சிலிண்டர்களில் தொடர்ந்து மானியம் பெற வேண்டும் என்றால் அதற்கு KYC செய்ய வேண்டும். KYC செய்ய இன்றே (மார்ச் 31)கடைசி நாள் ஆகும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் மார்ச் 31ஆம் தேதிக்கு பின் மானியம் நிறுத்தப்படும்.
KYC இரண்டு வழிகளில் செய்யப்படலாம் கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு சென்று KYC செய்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலமாகவும் KYC பெற விருப்பத்தை தேர்வு செய்து செய்யலாம். ஆன்லைன் மூலம் செய்ய எளிய வழிமுறைகள் இதோ: முதலில் அதிகாரப்பூர்வ வலைதளமான https://www.mylpg.in/என்பதற்குள் செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில் ஹச் பி இந்தியன் மற்றும் பாரத் கேஸ் கம்பெனி எரிவாயு சிலிண்டர்களின் படங்கள் இருக்கும்.
உங்களுடைய எரிவாயு நிறுவனத்தின் சிலிண்டர் படத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் KYC விருப்பம் காட்டும் அதை கிளிக் செய்ய வேண்டும். பின் ஆதார் சரிபார்ப்பு கேட்கப்படும் மற்றும் OTP வரும் OTP வந்தபின் புதிய பக்கம் திறக்கும். இந்த பக்கத்திற்கு பின் நிறுவனம் கேட்கும் விபரங்களை உள்ளிட வேண்டும். பெண் கேஒய்சி புதுப்பிப்பு செயல்முறை முடிந்துவிடும்.
Readmore: Election 2024: தமிழகத்தில் 874 ஆண்கள், 76 பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி…!