மக்களே இது புதுவித மோசடியா இருக்கு..!! கொஞ்சம் பார்த்து இருங்க..!! ஸ்கிரீன் ஷாட் மூலம் பணம் அபேஸ்..!!
இந்தியாவில் ஆன்லைன் நிதி மோசடிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புது புது வழிகளை கையாண்டு மோசடியாளர்கள் பணத்தை பறிக்கின்றனர். மின்னஞ்சல்கள், மெசேஜ் மற்றும் போன் கால்கள் மூலம் வங்கியில் இருந்தோ அல்லது அரசு நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல, பேசி அல்லது தகவல்களை அனுப்பி நமது ரகசிய தகவல்களை பெறுவார்கள்.
அதன் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவார்கள். மேலும், சில குறிப்பிட்ட லிங்குகளை அனுப்பி அதன் மூலம் நமது தகவல்களை திருடுவது ஒருவகையான ஸ்கேம் ஆகும். இத்துடன் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சோஷியல் மீடியா மூலம் நம்மை தொடர்பு கொண்டு நாம் குறைந்த முதலீடு செய்தாலே போதும் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி நம்மிடம் பணத்தை பறிப்பது ஒரு வகையான மோசடி ஆகும்.
இந்நிலையில், போலி ஸ்கிரீன் ஷாட் அனுப்பி மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணத்தை திருடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். ரூ.200, ரூ.400 தவறுதலாக அனுப்பி விட்டதாக கூறி, முதலில் ஸ்கிரீன் ஷாட் அனுப்புவதாகவும், பிறகு அந்த பணத்தை திருப்பி அனுப்ப கியூஆர் கோடை அனுப்புவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதை நம்பி கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பினால், வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் திருடுபோகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! வருகிறது முக்கிய அறிவிப்பு..?