முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’பொய் வழக்கு போடுவதில் மட்டுமே கவனம்’..!! ’முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்’..!! சவுக்கு சங்கர் முழக்கம்..!!

The police focus only on filing false cases. Shankar raised slogans in the court saying that he was not interested in eradicating bootleg liquor.
06:20 PM Jun 20, 2024 IST | Chella
Advertisement

காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார்.

Advertisement

பெண் காவலர்களை இழிவுபடுத்தியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகி புழல் சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. சிறையில் உள்ள சவுக்கு சங்கர், மோசடி வழக்கு தொடர்பாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு போலீசார் சவுக்கு சங்கரை அழைத்துச் சென்றனர்.

அப்போது, நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. "தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காகதான் காவல்துறையை வைத்திருக்கிறது. பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க செலுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலி போயிருக்காது. திமுகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று குரல் எழுப்பினார்.

Read More : கள்ளச்சாராய விவகாரம்..!! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி..!! அண்ணாமலை அறிவிப்பு..!!

Tags :
கள்ளக்குறிச்சிகள்ளச்சாராயம்சவுக்கு சங்கர்முதல்வர் முக.ஸ்டாலின்
Advertisement
Next Article