Budjet 2024 | அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! - நிதியமைச்சர் அறிவிப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். இதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- நிதி அமைச்சர் உரையில், இந்த பட்ஜெட் 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் அதாவது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு ரோடுமேப் ஆக இருக்கும்.
- இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மின்னுகிறது
- அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ₹2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது
- 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.
- நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி .
- நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி என நிதி அமைச்சர் உரையில் தெரிவித்தார்.
Read more ; Budjet 2024 | அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! – நிதியமைச்சர் அறிவிப்பு