For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறையில் பழக்கமான நண்பனின் மனைவியுடன் உல்லாசம்..!! குடிக்க வைத்து குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்..!!

The incident where a prison friend who had an affair with his wife was hacked to death by his friends has created a sensation.
04:38 PM Jun 24, 2024 IST | Chella
சிறையில் பழக்கமான நண்பனின் மனைவியுடன் உல்லாசம்     குடிக்க வைத்து குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்
Advertisement

மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்த சிறை நண்பனை, நண்பர்களோடு சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மணன் (26). இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், லக்ஷ்மணனும் புழல் சிறையில் இருந்த போது நண்பர்களாகியுள்ளனர். இந்நிலையில், விஷ்ணுவுக்கு லட்சுமணனின் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து லட்சுமணனுக்கு தெரியவரவே, தமது நண்பனான விஷ்ணுவிடம் தட்டி கேட்டுள்ளார். பொன்னேரியில் விஷ்ணுவுடன் மது அருந்திய லக்ஷ்மணன், விஷ்ணுவுடன் அவரது ஊரான தோட்டக்காடு சென்று அங்கும் அமர்ந்து நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர். அப்போது, மீண்டும் மனைவியுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து கேட்டுள்ளார். அப்போது, விஷ்ணு தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து லக்ஷ்மணனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர், தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மீஞ்சூர் போலீசார், தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். லட்சுமணனின் மனைவி ரம்யாவிடம் காவல்துறையினர் கள்ளத்தொடர்பு தொடர்பாகவும், கொலை தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தட்டிக்கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’பாடம் நடத்துறத விட இதுதான் எனக்கு முக்கியம்’..!! பள்ளி நேரத்தில் பெண்ணுடன் உல்லாசம்..!! ஆசிரியரை அடித்து துவைத்த மக்கள்..!!

Tags :
Advertisement