உங்கள் குழந்தைகள் Genius-ஆக இருக்க வேண்டுமா? அப்போ இந்த மீனை கண்டிப்பா கொடுங்க..
பெற்றோர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஆசை, தங்களின் குழந்தைகள் Genius-ஆக இருக்க வேண்டும் என்பது தான். இதற்காக பலர் சந்தையில் விற்கப்படும் பொடிகளை வாங்கி பாலில் கலந்து கொடுப்பது உண்டு. ஆனால் கெமிக்கல் நிறைந்த இந்த பொடிகளால் உடலுக்கு கிடைக்கும் நன்மையை விட தீமைகள் தான் அதிகம். அதனால் இயற்கையாகவே கிடைக்கும் உணவுகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மீன்கள் மிகவும் நல்லது. அதிலும் கிழங்கான் மீனில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. உடல் பழுப்பு வெள்ளை நிறத்தில், தலையில் சிவப்பு நிறத்தில், கைவிரல் அளவிற்கு இருக்கும் இந்த வகை மீன் மிகவும் சுவை மிக்கது.
இந்த மீனில் புரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனால் உங்கள் குழந்தைக்கு அடிக்கடி இந்த மீனை சாப்பிட கொடுப்பதால், அவர்களின் மூளை வளர்ச்சிக்கு இது உதவுகிறது. மேலும், சருமம் பொலிவு பெற இந்த மீன் மிகவும் உதவும். இந்த மீனில், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதுடன், மூலம் போன்ற நோய்கள் வருவதை தடுக்கலாம். அது மட்டும் இல்லாமல், இந்த மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. மேலும், இந்த மீனை சாப்பிடுவதால் வாத நோய் வராமல் தடுக்க முடியும். மாரடைப்பு போன்ற இதய நோய் வராமல் தடுக்க இந்த மீன் மிகவும் உதவும். இந்த மீனை வைத்து நீங்கள் குழம்பு, கிரேவி, பொரித்து, சொதி வைத்து சாப்பிடலாம்.
Read more: பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..