For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாட்டிலேயே முதல்முறை..!! நடமாடும் இ-சேவை கேந்திரா அறிமுகம்..!! இதனால் என்ன பயன்கள் தெரியுமா..?

A mobile e-Seva Kendra with computer facilities has been started for the first time in Kerala to cater to the people's court-related services.
02:09 PM May 28, 2024 IST | Chella
நாட்டிலேயே முதல்முறை     நடமாடும் இ சேவை கேந்திரா அறிமுகம்     இதனால் என்ன பயன்கள் தெரியுமா
Advertisement

நீதிமன்றம் தொடர்பான மக்களின் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், கணினி வசதிகளுடன் கூடிய நடமாடும் இ - சேவை கேந்திரா என்ற சேவை மையம், முதன்முறையாக கேரளாவில் துவங்கப்பட்டுள்ளது.

Advertisement

நீதிமன்ற சேவைகள் அனைவருக்கும் சென்று சேரும்படியும், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் நடமாடும் இ - சேவை கேந்திரா துவங்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்கள், மாநிலத்தில் ஏதாவது ஒரு மாவட்ட நீதிமன்றம் ஆகிய இடங்களில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் இ - சேவை கேந்திரா துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

நடமாடும் நீதிமன்றங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், நீதிமன்றம் தொடர்பான அனைத்து உதவி மற்றும் சேவைகளை ஓரிடத்தில் பெறும் வகையில், இடுக்கி மாவட்டத்தில் நடமாடும் இ - சேவை கேந்திரா வாகனத்தின் பயன்பாடு துவக்கி வைக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய் முன்னிலையில், நீதிபதி ஏ.முஹமது முஸ்தக் துவக்கி வைத்தார். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நடமாடும் மினி பஸ்சில், இணையதள வசதிகளுடன் 2 கம்ப்யூட்டர்கள், ஒரு பிரின்டர் மற்றும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.

தொழில்நுட்பம் குறித்து அறிமுகம் இல்லாதவர்கள், எளிய முறையில் நீதித்துறையை அணுகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று தன் சேவையை வழங்கும். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இடுக்கி மாவட்டத்தில் அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடமாடும் இ - சேவா கேந்திரா துவங்கப்பட்டு உள்ளது. இந்த நடமாடும் இ - சேவை மையத்தை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறையில் உள்ளவர்களை அவர்களது உறவினர்கள் சந்திக்க, முன்பதிவு மனுவை தாக்கல் செய்தல், மாவட்ட சேவை ஆணையம், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற சட்ட சேவைக் குழு ஆகியவற்றில் இருந்து இலவச சட்ட சேவைகள் பெறுவது குறித்த விவரங்களும், இந்த நடமாடும் இ - சேவா வாகனம் மூலம் வழங்கப்பட உள்ளன.

Read More : அரசுப் பேருந்தில் மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம்..!! போக்குவரத்துத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement