முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாடு முழுவதும் “முதல்வர் மருந்தகம்”..!! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

It has been announced that those who are willing to set up Chief Minister's Dispensary all over Tamil Nadu can apply.
04:45 PM Nov 07, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மலிவு விலையில் பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில், முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவித்திருந்தார். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முதல்வர் மருந்தகங்கள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், மருந்து சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

மேலும், மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். எனவே, முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B-Pharm/ D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் கூட்டுறவுத்துறை மூலம் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”திமுகவை அழிக்க வந்துருக்கீங்களா”..? ”பாக்கதான போறீங்க”..!! விஜய்யை அட்டாக் செய்த உதயநிதி..?

Tags :
கூட்டுறவுத்துறைதமிழ்நாடு அரசுமுதல்வர் மருந்தகம்
Advertisement
Next Article