For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"முதலில் இந்த ரூல்ஸ்-ஐ மாத்தணும்..!" இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்வது என்ன?

02:07 PM May 17, 2024 IST | Mari Thangam
 முதலில் இந்த ரூல்ஸ் ஐ மாத்தணும்      இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்வது என்ன
Advertisement

இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாராயணமூர்த்தி இந்தியாவின் கல்வி நிலையங்களில் உள்ள பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தொழில் முனைவு குறித்தும் தொழில்களை மேம்படுத்துவது குறித்தும் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெறும். அந்த வகையில் இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாராயணமூர்த்தி இந்தியாவின் கல்வி நிலையங்களில் உள்ள பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், பெரும்பாலான தொழில் முனைவோர் பெரிய அளவிலான தொகையை கைகளில் வைத்திருக்க மாட்டார்கள், அவர்களிடம் பங்குகளே இருக்கும். எனவே கல்வி நிறுவனங்கள் பங்குகளை நன்கொடைகளாக பெற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்களை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என நாராயணமூர்த்தி கூறியுள்ளார். மேலும், இந்த பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த நவீன காலத்தில் கூட ஒரு தொழில் முனைவோரால் பங்குகளை நன்கொடையாக வழங்க முடியாத சூழல் இந்தியாவில் தான் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பேசிய இன்ஃபோசிஸ் துணை நிறுவனரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் "அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களை பாருங்கள், எம்ஐடி, ஹார்வேர்ட், ஸ்டான்போர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான டாலர்களில் நன்கொடைகள் கிடைக்கின்றன.

ஆனால் இந்தியாவில் நம்முடைய பல்கலைக்கழகங்களும் நிதி நிறுவனங்களும் பெரும்பாலும் அரசின் நிதியை சார்ந்திருக்கின்றன .கல்லூரிகளில் தொழில்துறையின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் ,அதற்கு ஏற்ற வகையில் தொழில் துறையினர் பங்குகளை நன்கொடையாக வழங்கும் பொருட்டு மாற்றங்களை கொண்டு வருவது அவசியம்" என கூறியுள்ளார்.

’சினிமாவுல வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்’..!! நடிகை தீபா பாலு ஓபன் டாக்..!!

Tags :
Advertisement