சுற்றுச்சூழல் பேரழிவு.! அண்டார்டிகாவில் புதுவகை பறவை காய்ச்சல்.! ஏவியன் இன்ஃப்ளுவென்சா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை.!
அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், அதிகம் பரவக்கூடிய ஏவியன் இன்ஃப்ளூயன்சா வைரஸ் (HPAIV) இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வழிவகுக்க கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அண்டார்டிகாவின் பிரதான நிலப்பரப்பில், ஏவியன் இன்ஃப்ளுவென்சா வைரஸ் (HPAIV) எனப்படும் அதிக அளவில் பரவக்கூடிய நோய்க்கிருமி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது பறவைகளிடையே கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இது சுற்றுச்சூழல் பேரழிவுக்கு வலியுறுத்த கூடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர். செவரோ ஓசிகோ மூலக்கூறு உயிரியல் மையத்தின் (CSIC) ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்குவா எனப்படும் பெரிய கடற்பறவை இனத்தை இந்த வைரஸ் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்ஐசியின் ஆண்டோனியோ ஆல்காமி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, இறந்த இரண்டு ஸ்குவா பறவைகளின் மாதிரிகளில் இந்த வைரஸை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, இந்த வைரஸ் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மாதிரிகள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மாதிரிகள் எடுக்கப்பட்டவுடன், அதில் உள்ள வைரஸ்கள் உடனடியாக செயலிழக்க செய்யப்பட்டு, அவற்றைப் பாதுகாப்பாக ஆய்வுக்கு உட்படுத்துவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறந்த அந்த பறவைகள், பறவை காய்ச்சலின் H5 துணை பிரிவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மாதம், அண்டார்டிகாவின் பிரதான நிலப்பகுதிக்கு அருகில் உள்ள ஜென்டூ பென்குயின்களில் ஒருவகை பறவை இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது மனிதர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய துருவத் திட்டங்கள் அமைக்கப்படும் என்று கொலம்பியாவின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.