காதுக்குள் பூச்சி சென்று விட்டால், உடனே என்ன செய்ய வேண்டும்? கட்டாயம் இதை தெரிந்துக் கொள்ளுங்கள்..
ஒரு சில நேரங்களில் நம்மை அறியாமல் நமது காதில் சின்ன பூச்சி அல்லது எறும்பு சென்று விடும். இது போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு நடப்பது உண்டு. அப்படி காதுக்குள் சென்ற பூச்சிகளை எப்படி வெளியே எடுக்க வேண்டும் என்று கட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு சூழ்நிலையில் நமக்கு கண்டிப்பாக தேவைப்படும். காதில் பூச்சி சென்ற உடன் துரிதமாக செயல் பட்டு எடுத்து விட வேண்டும். இதற்காக நாம் பொறுமையாக கிளம்பி மருத்துவமனைக்கு செல்லும் வரை காதில் பூச்சி இருந்தால் அதன் விளைவு என்னவாகும் என்று நமக்கு தெரியாது. இதனால் காதில் பூச்சி சென்று விட்டால் பதட்டம் இல்லாமல், துரிதமாக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
காதுக்குள் சின்ன பூச்சி அல்லது எறும்பு நுழைந்து விட்டால், அது உள்ளே சென்று காது ஜவ்வு பகுதியை கடித்து வலியை ஏற்படுத்தும். அதற்கு முதலில், ஒரு இருட்டு அறைக்கு சென்று டார்ச் லைட் அடித்து பார்க்க வேண்டும். சின்ன வண்டுகள், வெளிச்சம் பட்ட உடன் வெளியே வந்துவிடும். இது வேலை செய்யவில்லை என்றால், சிறிது வெதுவெப்பான நீரில் உப்பு கலந்து காதுக்குள் விட வேண்டும். இதனால் பூச்சிகள் உடனே வெளியே வந்து விடும். பிறகு தலையை சிறிது நேரம் கவிழ்த்து வைத்து தண்ணீரை துடைத்து விடலாம்.
ஒரு சில பூச்சிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் தண்ணீர் ஊற்றியும் இறக்காது. அந்த சமயங்களில், சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் காதில் விட்டால், சிறிது நேரத்தில் பூச்சிகள் இறந்து வெளியே வந்துவிடும். இவை அனைத்தும் செய்த பிறகும், காத்து வலி அல்லது பூச்சி வெளியே வரவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Read more: வெறும் வயிற்றில் இந்த தண்ணீர் குடிங்க; நீங்க ஆசைப்படுற மாதிரி ஸ்லிம்மா இருக்கலாம்..