For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திரும்பிய இடமெல்லாம் வானவேடிக்கை!… தீபாவளியாக மாறிய ராமர் கோவில் திறப்பு விழா!… ரூ.500 கோடிக்கு பட்டாசு விற்பனை!

08:45 AM Jan 23, 2024 IST | 1newsnationuser3
திரும்பிய இடமெல்லாம் வானவேடிக்கை … தீபாவளியாக மாறிய ராமர் கோவில் திறப்பு விழா … ரூ 500 கோடிக்கு பட்டாசு விற்பனை
Advertisement

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி நாடுமுழுவதும் வானவேடிக்கை, தீபங்கள் ஏற்றி மக்கள் பெரும் உற்சாகத்துடன் தீபாவளியை போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Advertisement

உலகமே திரும்பி பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் பூஜை நடத்தினார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், துறைசார் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற அரசியல்வாதிகள் உட்பட பலர் தங்கள் வீடுகளில் 'தீபோத்ஸவ்' கொண்டாடியபோது, ​​​​சிலர் தெருக்களில் வந்து சிறப்பு விளக்குகளை ஏற்றி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அந்தவகையில் நாடுமுழுவதும் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து தொகுப்பை பார்க்கலாம்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சென்னையில் பல்வேறு இடங்களில் மக்கள் குழுவாக சேர்ந்து கோலமிட்டு தெருக்களில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் உள்ள காங்சபதி ஆற்றின் கரையில் 1,001 'தீபங்கள்' ஏற்றி மக்கள் வழிபட்டனர். இதேபோல், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் குருகுல விஸ்வவித்யா பிரதிஸ்தானத்தில் (எஸ்ஜிவிபி) ராமர் கோயில் திறப்பைக் குறிக்கும் வகையில் திங்கள்கிழமை மாலை நூற்றுக்கணக்கான சிறப்பு விளக்குகள் ஏற்றியும் பட்டாசுகளை வெடித்தும் மக்கள் கொண்டாடினர்.

இதேபோல் ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி, சண்டிகரில் மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமடைந்தனர். கேரளாவில், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில், 'ராம் ஜோதி' ஏற்றி, ஏராளமானோர் காணிக்கை செலுத்தினர். குழந்தைகள் ராமர் போல் வேடமிட்டு கொண்டாடினர். சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் கோட்டா பகுதியில் அயோத்தி ராமர் கோவில் ‘பிரான் பிரதிஷ்டா’ விழாவை முன்னிட்டு மக்கள் ஏராளமானோர் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். இதேபோல், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை நதி கரையில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பெங்களூரில் உள்ள இஸ்கான் கோவிலில் விளக்குகள் ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பீகாரிலும் பக்தர்கள் தீபங்களை ஏற்றி 'தீபத்ஸவ்' கொண்டாடினர். டெல்லியிலும் விளக்குகளை ஏற்றியும், மெழுவர்த்திகளை ஏற்றியும் மக்கள் பிரமாண்டமான முறையில் கொண்டாடினர். இதேபோல், வடகிழக்கு மாநிலங்களிலும் மக்கள் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடினர். கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயில் மற்றும் பாசிஸ்தா கோயிலில் தலா ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

இந்த ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் கொண்டாடினர். இந்நிலையில், ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி சிவகாசி உட்பட இந்தியா முழுவதும் 500 கோடி வரை பட்டாசுகள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
உற்சாகத்தில் திழைத்த மக்கள்தீபாவளிராமர் கோவில் திறப்பு விழாவானவேடிக்கை
Advertisement