’இனி குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்’..!! அமைச்சர் அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் மாநிலத்தில் இருந்து டெல்லி வழியாக ஓடும் யமுனை நதியில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. டெல்லி பகுதியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஹரியானாவில் ஆளும் பாஜக அரசு, டெல்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத்து விட்டதே இதற்கான காரணம் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.
டெல்லியில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், இனி ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். இதையடுத்து, மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே, குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் குடிநீரை வீணாக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குடிநீரை வீணாக்கினால், 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கார் கழுவுதல், வீடுகளில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுதல், போன்றவற்றிற்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடுமையான குடிநீர் கொஞ்சம் ஏற்பட்டு, இதே போன்ற அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது டெல்லியிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : ’மன்சூர் அலிகான் என்னை தள்ளிவிட்டாரு’..!! முதல் படத்தின் அனுபவத்தை பகிர்ந்த நடிகர் சூரி..!!