அபராதம் ரூ.5,000இல் இருந்து ரூ.10,000ஆக உயர்வு..!! மாட்டு உரிமையாளர்களே உஷார்..!!
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் அந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதனைப் பொருட்படுத்தாமல், மாநகரில் பல இடங்களிலும் மாடுகள் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகளில் நடந்து செல்லும் பயணிகளும், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளும், பெண்களும் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளது.
அதேபோல, சாலைகளின் குறுக்கே சர்வ சாதாரணமாக உலா வரும் மாடுகளால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நிகழாண்டில் மட்டும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி திரிந்த 1,100-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான அபராதத் தொகை ரூ.5,000இல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்படவுள்ளது. சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சாலைகளில் உலாவும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது முதன்முறையெனில் 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்படுவதெனில் ரூ.15,000 அபராதத் தொகை செலுத்த வேண்டும். மேலும், பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்கள் 2 நாட்களுக்குள் மாடுகளை அழைத்துச் செல்லாவிட்டால், 3ஆம் நாளில் இருந்து மாடுகளின் பராமரிப்பு செலவுக்காக ரூ.1,000 கூடுதலாக வசூலிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More : பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு..!! தவெக தலைவர் விஜய் இரங்கல்..!!