உலகின் தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியம்!! தனித்துவங்களும் சுவாரஸியங்களும்!
உலகில் உள்ள தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்கள் எங்கெங்கே உள்ளது அதில் அடங்கியுள்ள சுவாரஸியங்கள் பற்றி இதில் தெரிந்துகொள்வோம்.
நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம்
உலகில் அருங்காட்சியகங்கள் இல்லாத நாடுகளே இல்லை. அந்தவகையில் இங்கிலாந்தின் யார்க் நகரில் உள்ள நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய ரெயில்வே அருங்காட்சியகமாக திகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ரெயில் என்ஜின்களைக் கூட இங்கே பார்க்கலாம். செகண்ட் நம் வால்ஸ் என்ட் அருங்காட்சியகம் இதுவும் இங்கிலாந்தில் உள்ளது. இங்கே ரோமானியர் காலத்து குளியல் வீடுகள், கோட்டைகள் பிரசித்தம். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள பிகாசோ அருங்காட்சியகத்தில் உலகப்புகழ்பெற்ற ஓவியர் பிகாசோவின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை இங்கே பார்க்கலாம்.பிகாசோவின் ஓவியங்கள் வேறு எங்கும் இவ்வளவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஸ்டர் கெஸ்சிசிட் பான் அருங்காட்சியகம் ;
இது ஜெர்மனியில் உள்ளது. ஒவ்வொரு வரலாற்றுப் போருக்கும் பிந்தைய ஜெர்மனியை விவரிக்கும் அருங்காட்சியகம் இது. நாடுகளுக்கு இடையே பனிப்போர் உருவாகக் காரணமான சம்பவ தொகுப்புகளும் இங்கு உண்டு. லூசியானா அருங்காட்சியகம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் நவீன மற்றும் தற்காலத்து ஓவியங்கள் நிறைய உள்ளன. வாசா அருங்காட்சியகம் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. 1628-ம் ஆண்டு மூழ்கிய சுவீடன் நாட்டு போர்க் கப்பலை 1961-ம் ஆண்டு கண்டெடுத்தனர். அந்த பழமையான கப்பல் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
நேச்சர் ஹிஸ்டாரிஸ் அருங்காட்சியகம்
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இது உள்ளது. முழுக்க முழுக்கக் கண்ணாடியால் கட்டி அலங்கரிக்கப்பட்ட அருங்காட்சியகம். வரலாறு மற்றும் புவி தொடர்பான தொல்பொருள் துறை கண்டுபிடிப்புகள் இங்கே நிறைய உள்ளன.
பீட்டர் அண்ட் பால் போர்ட்ரஸ் அருங்காட்சியகம்
இது ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ளது. இந்நகர் வரலாற்றை சொல்லும் இந்த அருங்காட்சியகம், மிகவும் பழமையானது. மியூஸியம் ஆப் பைன் ஆர்ட் இது அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் கலை மற்றும் கலாசார நினைவுச் சின்னங்களைக் கொண்டிருக்கிறது. பிலடெல்பியா மியூஸியம் ஆப் ஆர்ட் இதுவும் அமெரிக்காவில் உள்ள மியூஸியமே. இங்கு ஓவியங்கள், சிற்பங்கள், புராதனப் பொருட்கள் ஏராளமாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த அருங்காட்சியகங்கள்:
கன்னியா குமரியில் மெழுகு அருங்காட்சியகம் 2005 இல் திறக்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் மெழுகு அருங்காட்சியகம் ஆகும். லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தைப் போலவே, மகாத்மா காந்தி, ஜாக்கி சான், ஷாருக் கான், ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்களின் மெழுகு சிலைகள் உள்ளன. ஹைதராபாத்தில் 1951 இல் நிறுவப்பட்ட சாலார் ஜங் அருங்காட்சியகத்தில், மெஃபிஸ்டோபிலிஸ் & மார்கரெட்டாவின் இரட்டை சிலை மிகவும் பிரபலமானது. அத்திமர மரத்தின் ஒற்றை மரத்தடியில் செதுக்கப்பட்ட இந்த சிற்பத்தின் இருபுறமும் இரண்டு தனித்தனி உருவங்கள் உள்ளது. ஒருபுறம் கர்வமுள்ள தீய மெஃபிஸ்டோபீல்ஸ், மறுபுறம் மென்மையான, சாந்தகுணமுள்ள மார்கரெட்டா.
காத்தாடி அருங்காட்சியகம்
1954 இல் அகமதாபாத்தின் கலாச்சார மையமாக உருவாக்கப்பட்ட சன்ஸ்கார் கேந்திராவின் ஒரு பகுதியாகும். அருங்காட்சியகத்தின் கட்டிடம் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான லு கார்பூசியரால் வடிவமைக்கப்பட்டது.இந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான வடிவமைப்புகள், காத்தாடிகள் தயாரிப்பதற்கான காகிதங்கள், ஜப்பானிய காத்தாடிகள், பிளாக்-பிரிண்ட் காத்தாடிகள் போன்றவை உள்ளன.விராசட்-இ-கல்சா ஒரு கட்டடக்கலை அதிசயம், சீக்கிய மதத்தின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் 550 ஆண்டு பயணத்தை நினைவுகூரும் ஒரு முக்கிய அருங்காட்சியகம். பஞ்சாபில் உள்ள புனிதமான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் நவம்பர் 25 ஆம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
‘பிளாக் மேஜிக் கேபிடல்’ என்று அழைக்கப்படும் மயோங், அஸ்ஸாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கண்காட்சிகளில் சூனியம் பற்றிய புத்தகங்கள், தாந்த்ரீக கையெழுத்துப் பிரதிகள், கையால் செய்யப்பட்ட பொம்மைகள், மண்டை ஓடுகள் மற்றும் சூனிய சடங்குகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் உட்பட ஏராளமான வினோதமான உள்ளூர் கலைப்பொருட்கள் உள்ளன. திபெத்தின் மரபுகள், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கும் அருங்காட்சியகத்தில் திபெத்திய கலாச்சாரத்தின் பல்வேறு அரிய கலைப்பொருட்கள் உள்ளன. இதில்,திபெத்திய புத்தகங்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் காப்பகமும் உள்ளது.
Read more ; அண்ணாமலைக்கு ரபேல் வாட்சை பரிசளித்ததே திமுக-வை சேர்ந்தவர் தான்..!! – சர்ச்சையை கிளப்பிய கல்யாணராமன்!