Woww...! கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி திட்டம்... தமிழக அரசு புதிய அறிவிப்பு...!
பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையிலான திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களின் கர்ப்பம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வகையில், பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டமான மகளிர் திட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து மற்றும் நிதி பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. பிரசவிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் நான்காவது மாதத்தில் 6000 ரூபாய், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் 6 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் 2000 ரூபாய் என வழங்கப்படுகிறது. மேலும் பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.