For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்றுமுன்.. திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி கைது? - என்ன விவகாரம்?

Film director Mohan Ji, who directed films like Draupadi, Rudra Thandavam and Bhagasuran, has been arrested.
09:54 AM Sep 24, 2024 IST | Mari Thangam
சற்றுமுன்   திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி கைது    என்ன விவகாரம்
Advertisement

2016 ஆம் ஆண்டு பழைய ‘வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி.  இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரௌபதி படத்தை இயக்கியதன் மூலம் மக்களின் கவனம் இவர் மீது திரும்பியது, திரௌபதி படம் கிளப்பிய பெரும் சர்ச்சையே அவர் பெற்ற கவனத்திற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்த படம் பல விமர்சனங்களை சந்தித்த போதிலும் கூட சில காரணங்களால் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது.

Advertisement

திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட் நாயகனாக நடித்த ருத்ரதாண்டவம், செல்வராகவனை வைத்து பாகாசுரன் ஆகிய படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்டதாக பலரால் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. மோகன் ஜியும் அவ்வபோது எக்ஸ் தளத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் என்ன வழக்கில் கைதாகியுள்ளார் என்ற தகவலை போலீசார் இன்னும் வெளியிடவில்லை.

முன்னதாக திருப்பதி லட்டு விவகாரத்தில், “எப்படி மனசாட்சி துளிக்கூட இல்லாமல் இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கிறீர்கள். வைணவ முத்திரை வாங்கிய எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். கொடூஎஅமான தண்டனை வழங்க வேண்டும் இந்த கொடிய செயலை செய்த மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்” என பேசியுள்ளார். அவரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read more ; ”வெந்நீரில் குளித்தால் ஆண்மை பறிபோகுமா”..? இன்றே மாறுங்கள்..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!

Tags :
Advertisement