For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கும் படக்குழு..!! - தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்

11:21 AM Aug 10, 2024 IST | Mari Thangam
தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கும் படக்குழு       தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்
Advertisement

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

Advertisement

படத்தின் புரோமோசனுக்காக கோவைக்கு வந்திருந்த தங்கலான் படக்குழுவினர், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டது. அதில், தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லுமா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான தனஞ்செயன் கூறுகையில், " நிச்சயம் படத்தினை ஆஸ்காருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். இந்த ஆண்டு ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்போகின்றார்கள். அந்த அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் தங்களான் படத்தை பரிந்துரைக்கு அனுப்பவுள்ளோம்.

அதன் பின்னர், ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா தங்கலான் படத்தினை ஆஸ்காருக்கு அனுப்பலாம் என முடிவு செய்தால் கட்டாயம் தங்கலான் படம் ஆஸ்காருக்குச் செல்லும் எனக் கூறினார். மேலும், ஃபிலிம் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா டீமில் இருப்பவர்கள் படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு படம் கட்டாயாம் ஆஸ்காருக்கு பரிந்துரைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக் கூறினார்கள்.

Read more ; இனி ஆண்களுக்கும் மாதம் ஆயிரம் உதவித்தொகை..!! – அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!

Tags :
Advertisement