பார்ட்னருடன் அடிக்கடி சண்டை வருகிறதா.? செய்வினையா என்று இந்த ட்ரிக்ஸ் முயற்சி செய்து பாருங்க வச்சிருந்தா தெரிஞ்சிடும்.!
கணவன் மனைவி உறவில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும் ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியை பிரிப்பதற்கு அவர்களிடம் கோள் சொல்வது மற்றும் பில்லி சூனியம் போன்ற மாந்திரீகங்களின் மூலம் அவர்களை பிரிக்க நினைப்பது என்பது போன்ற நடவடிக்கைகளில் வேண்டாதவர்கள் ஈடுபடலாம்.
இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்தால் அவர்களுக்கு யாரேனும் சூனியம் வைத்திருக்கிறார்களா என்பதை கண்டுபிடிப்பதற்கான எளிய வழி ஒன்று இருக்கிறது. இந்த முறைப்படி செய்து பார்த்தால் அதில் வரும் அடையாளங்களைக் கொண்டு கணவன் மனைவியை பிரிப்பதற்கு முயற்சிகள் நடந்து இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த முறை செய்து பார்ப்பதற்கு ஒரு கிளாசில் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்த பின்னர் இரண்டு தீக்குச்சிகளை எடுத்து கைகளில் வைத்து உரசி அதனை கிளாஸில் இருக்கும் தண்ணீரில் போட வேண்டும். அப்போது இரண்டு குச்சிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை பொறுத்து கணவன் மற்றும் மனைவியை பிரிக்க சதி நடந்து இருக்கிறதா என்பதை கண்டறியலாம்
இரண்டு குச்சிகளும் நெருக்கமாக இருந்தால் கணவன் மனைவியை பிரிக்க சதி செய்கிறார்கள் என்று அர்த்தம். இரண்டு குச்சிகளும் எக்ஸ் வடிவத்தில் இருந்தால் அவர்கள் முயற்சி செய்து வெற்றியும் பெற்று விட்டார்கள் என்று அர்த்தமாகும். மேலும் இரண்டு தீக்குச்சிகளும் தனித்தனியாக இருந்தால் அவர்கள் முயற்சி செய்யவில்லை என்று பொருள். உங்கள் பார்ட்னர் உடன் சண்டை அடிக்கடி சண்டை வந்தால் இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள்.