முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டி!… 2வது இடத்தில் தமிழக வீராங்கனை வைஷாலி!

07:27 AM Nov 01, 2023 IST | 1newsnationuser3
Advertisement

ஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செய்ஸ் போட்டியின் 6வது சுற்றில் ரஷ்யா வீராங்கனை கோரியாச்கினாவுடன் டிரா செய்து தமிழக வீராங்கனை வைஷாலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

பிரிட்டனின் ஐல் ஆப் மேனில், 'கிராண்ட் சுவிஸ் ஓபன்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், அர்ஜுன், அமெரிக்காவின் ஆரோனியன், பேபியானோ காருணா உள்ளிட்ட 114 பேர் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறுகின்றன. பெண்கள் பிரிவு 4வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, முன்னாள் உலக சாம்பியன் உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி, 23வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். நான்கு சுற்றுகளின் முடிவில் தலா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற 6வது சுற்றுப்போட்டியில் தமிழக வீராங்கனை வைஷாலி - ரஷ்யாவின் முதல் நிலை வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கின்ஸ் உடன் மோதினார். இதில் கோரியாச்கினாவுடன் டிரா செய்து 4.5 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். கஜகஸ்தானின் பிபிசரா அசாபுயேவாவை தோற்கடித்து, 5 புள்ளிகளுடன் உக்ரைனின் அன்னா முசிச்சுக் முதலிடத்தில் உள்ளார்.

Tags :
2வது இடத்தில் தமிழக வீராங்கனைFIDE Women's Grand Swiss Chessஃபிடே மகளிர் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிவைஷாலி
Advertisement
Next Article