முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கர்ப்பப்பை கோளாறு மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் தீரணுமா.? கழற்சிக்காயில் இருக்கும் அற்புதமான குணங்கள்.!

05:50 AM Dec 21, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கழற்சிக்காய் இது கொடி வகையைச் சார்ந்த ஒரு தாவரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய காயாகும். இந்தக் காய் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுடைய கர்ப்பப்பை பிரச்சனைகள் மற்றும் மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Advertisement

கழற்சிக்காயை காய வைத்து அதனை பொடி செய்து ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாப்பிட்டு வர கர்ப்பப்பையில் தோன்றும் அழற்சிகள் மற்றும் தொற்றுக்களை சரி செய்கிறது. மேலும் இவை பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. கர்ப்பப்பையில் தோன்றும் நீர்கட்டிகளையும் சரி செய்கிறது. இவற்றைத் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வர கர்ப்பப்பை பிரச்சனைகள் சரியாகும்.

மேலும் பெண்மை ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் சுரப்பை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் குடல் புண், வயிற்றுக் கோளாறு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வைத் தருகிறது. இந்தக் காயின் மேல் பகுதியில் இருக்கும் கடினமான தோலை நீக்கி அவற்றின் உள்ளிருக்கும் பருப்பை நன்றாக அரைத்து அதனை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

Tags :
BenefitsFever Nuthealth tipshealthy lifeUterus Issues
Advertisement
Next Article