நடக்கும்போது சலிப்பாக உணர்கிறீர்களா? நடைபயிற்சியை சுவாரஸ்யமாக மாற்ற இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..
நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நடைப்பயிற்சி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பது மட்டுமின்றி உங்களை கட்டுக்கோப்பாக வைக்கிறது. ஆனால் பல சமயங்களில் நடைப்பயிற்சியின் போது சோம்பேறித்தனமாகி நடுவில் விட்டுவிடுவார்கள். உங்கள் நடைப் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
ஒரு நேரத்தைத் திட்டமிடுங்கள் : காலையில், மதிய உணவு இடைவேளையின்போது அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஒரு நாளில் எப்போது நடக்க வேண்டும் என குறிப்பிட்டநேரத்தைத் தேர்வுசெய்யவும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் நடப்பது உங்கள் அட்டவணையின் வழக்கமான பகுதியாக ஆக்குகிறது,
நடைப்பயணத்தை வேடிக்கையாக ஆக்குங்கள் : நடைப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக்க, பிடித்த இசை, பாட்காஸ்ட்கள் அல்லது ஆடியோபுக்குகளைக் கேளுங்கள். ஒரு அழகான இடத்தில் அல்லது ஒரு நண்பர் அல்லது செல்லப்பிராணியுடன் நடப்பது அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றும்.
ட்ராக் : உங்கள் நடைப்பயிற்சி நேரத்தைக் கண்காணிக்க பெடோமீட்டர், ஃபிட்னஸ் ஆப் அல்லது கேலெண்டரைப் பயன்படுத்தவும். காலப்போக்கில் உங்கள் முன்னேற்றத்தைப் பார்ப்பது ஊக்கமளிக்கும் மற்றும் இந்த பழக்கத்தை உறுதிப்படுத்த உதவும்.
30 நிமிடம் நடைபயிற்சி : ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடக்கும் பழக்கத்தை உருவாக்குவது சவாலானதாக இருக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தை அமைத்து, சிறியதாக தொடங்கி, சுவாரஸ்யமாக நடப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்..