முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெடரேசன் கோப்பை 2024!… ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

08:49 AM May 16, 2024 IST | Kokila
Advertisement

Neeraj Chopra: 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

Advertisement

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் 2024-ம் ஆண்டுக்கான தேசிய பெடரேசன் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். 3 ஆண்டுகளில் முதன்முறையாக இந்திய மண்ணில் நடந்த போட்டியில் அவர் பதக்கம் வென்றுள்ளார்.

3 சுற்றுகளுக்கு பின் 2-வது இடம் பிடித்த அவர், 4-வது சுற்றில் 82.27 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முன்னிலை பெற்றார். போட்டியில் மற்றவர்களைவிட தொடர்ந்து முன்னிலை வகித்த நிலையில் இறுதிச்சுற்றில் அவர் விளையாடவில்லை. இந்தப் போட்டியில் டி.பி.மானு 82.06 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Readmore: நகர்ப்புறங்களில் குறைந்த வேலையின்மை!… எவ்வளவு தெரியுமா?… தேசிய மாதிரி ஆய்வுக் கணக்கெடுப்பு!

Advertisement
Next Article