வீட்டில் தந்தையின் சடலம்..!! மன தைரியத்துடன் தேர்வு எழுதி சாதித்த கடலூர் மாணவி..!!
பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி செல்வதற்கு பிளஸ்2 மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கும். இந்த மதிப்பெண்ணை வைத்தே மாணவர்களின் படிப்பு நிர்ணயம் செய்யப்படும். தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 7 லட்சத்து 72 ஆயிரத்து 360 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேரும் என 7 லடசத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில், திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டது. மாணவர்கள் மற்றும் மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் 94.56 %. மாணவர்களை விட மாணவிகள் 4.07 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடலூரில் தந்தை இறந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி 600-க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளார். இயற்பியல் தேர்வு அன்று அதிகாலையில் தந்தை ரத்தின வடிவேல் திடீரென உயிரிழந்தார். வீட்டில் தந்தை உடல் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், மன வலிமையுடன் தேர்வு எழுதிய ராஜேஸ்வரி 600-க்கு 474 எடுத்தது மட்டுமின்றி, இயற்பியல் பாடத்தில் 100-க்கு 70 மதிப்பெண் பெற்றுள்ளார்.
Read More : பிஃஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.!! உங்களுக்கு இலவசமா ரூ.50,000 வரப்போகுது..!!