தந்தையின் கொடுமை.. தாயின் இழப்பு.. தீப்பற்றி எரிந்த வீடு.. நடிகை கனகா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகிய நடிகை கனகாவின் தற்போதைய நிலை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் எதிர்பாராத பல பிரச்சனைகளை நடிகை கனகா சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
கனகா குழந்தையாக அதுவும் மூன்று மாதமாக இருக்கும்போதே அவருடைய அப்பா அம்மாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். அப்பாவுடைய அரவணைப்பு இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கிடைத்ததே இல்லையாம். இவருடைய அம்மா தான் இவரை முழுமையாக பார்த்து வளர்த்திருக்கிறார். கனகா ஸ்கூல் படிக்கும்போதே இவருடைய காட்பாதராக இவருடைய மாமா பெயரை வைத்திருந்தாராம். அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இவருடைய அப்பா ஸ்கூலில் வந்து அனைவரும் முன்னிலையிலும் நான் இருக்கும்போது எப்படி வேறு ஒருவருடைய பெயரை வைக்கலாம் என பெரிய அளவில் பிரச்சனை செய்து விட்டாராம்.
ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்த அதே மனக்கசப்பு 16 வது வயதிலும் தொடர்ந்து இருக்கிறது. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் இப்போது ராமராஜன் நடித்த கரகாட்டகாரன் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது அந்த திரைப்படத்தில் இவர் நடிக்கக் கூடாது என்று இவருடைய அப்பா அதிக அளவில் பிரச்சினை செய்தாராம். ஆனாலும் கங்கை அமரன் இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் பிரபலம் அடைந்து விட்டார். ஒரு வருடத்திலேயே எட்டு படங்களை நடித்து முடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த அதிசய பிறவி திரைப்படம் வெற்றி பெற்றது போலவே இவர் பத்தாம் வகுப்பு தேர்விலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதன் பின்னர் அவருடைய அம்மாவின் இறப்பு இவரை அதிகமாக பாதித்துவிட்டதாம். அம்மா மட்டுமே தனக்கு உலகம் என்று நினைத்துக் கொண்டிருந்த கனகாவின் அம்மாவின் இறப்பு இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள காரணமாக இருந்ததாம். இந்த நிலையில் இவரை இவருடைய ரசிகர்கள் பலர் மிஸ் பண்ணி வருவதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Read more : மொத்தம் 4 கணவர்கள், 2 காதலர்கள்… மேட்ரிமோனியில் வளம் வந்த பெண்ணால், வாலிபருக்கு நேர்ந்த சோகம்..