அதிக நேரம் செல்போனில் ரீல்ஸ் பார்த்த மகன்; பேட்டால் அடித்து கொடூர கொலை செய்த தந்தை...
பெங்களூரு குமாரசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் ரவிக்குமார். கார்பென்டராக வேலை செய்து வரும் இவருக்கு, மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர். இவரது 14 வயது மகன் தேஜஸ், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன், அதிகமாக செல்போனில் ரீல்ஸ் பார்ப்பதும் கேம் விளையாடுவதுமாக இருந்ததால், அவனால் சரியாக படிக்க முடியவில்லை. இதனால் ரவிக்குமார் அவரது மகனை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரது மகன் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் தனத்தை மகன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், தேஜஸ் கடந்த 20 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், தேஜஸ் இடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் தேஜஸ் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளான். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், வீட்டில் கிடந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து தனது மகன் தேஜஸ்சை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தேஜஸ் நிலை குலைந்து தரையில் விழுந்து வலி தாங்க முடியாமல் கதறினான். ஆனாலும் ஆத்திரம் அடங்காத ரவிக்குமார், தேஜஸ் தலையை சுவற்றில் மூட்டி தேய்த்துள்ளார். மேலும், நீ செத்தாலும் பரவாயில்லை எனக்கூறி தொடர்ந்து தனது மகனை தாக்கியுள்ளார். இதில் தேஜஸ், துடி துடித்து உயிரிழந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், போலீஸிடம் இருந்து தப்பிக்க அவசர அவசரமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் சிறுவனின் மரணம் குறித்து அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அறிந்த குமாரசாமி லே-அவுட் போலீசார் ரவிக்குமார் வீட்டிற்கு வந்து, சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உடற்கூறு ஆய்வின் முடிவில், சிறுவன் தாக்கிக் கொள்ளப்பட்டது உறுதியானது. இதுகுறித்து ரவிக்குமாரிடம் போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: கர்பமாக்கிவிட்டு காணாமல் போன காதலன்; குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய்..