கணவன் - மனைவி சண்டையை சமாதானம் செய்ய முயன்ற மாமனார்..!! கத்தியை எடுத்து சொருகிய மருமகன்..!! நெல்லையில் ஷாக்
கணவன் - மனைவி இடையிலான குடும்ப தகராறை சமதானம் செய்ய முயன்ற மாமனார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டை திருப்பணிகரிசல்குளம் மணிமேடை தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கு வயது 60 ஆகிறது. கூலித்தொழிலாளியான இவரது மகள் ராஜலட்சுமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து (40) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், இசக்கிமுத்து, சென்று அவர்களை சமாதானம் செய்து வைக்க முயன்றார்.
அப்போது அவருக்கும், மருமகன் சுடலைமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுடலைமுத்து, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாமனார் இசக்கிமுத்துவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதையடுத்து, அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின்பேரில், பேட்டை போலீசார் கொலை வழக்கில் மருமகன் சுடலைமுத்துவை கைது செய்தனர். கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறை சமாதானம் செய்து வைக்க முயன்ற மாமனாரை மருமகன் சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ”ராசாவே உன்ன காணாத நெஞ்சு”..!! காற்றில் கரைந்தார் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்..!! உடல் தகனம்..!!