மருமகளுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட மாமனார்.. வீட்டில் இருந்து கேட்ட சத்தத்தால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி..
கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் ஜூலமேரா கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கையா. இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இவர் தனது மகன் மற்றும் இவரது மருமகள் ஜாலம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் தினமும் கூலி வேலைக்கு சென்ற பிறகு, ராமலிங்கையா தனது மருமகள் ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், ராமலிங்கையாவுக்கு அறிவுரை கூறி வந்தனர். ஆனால் யார் சொல்லியும் கேட்காத ராமலிங்கையா, வழக்கம் போல் வீட்டில் நுழைந்து ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தனது ஆசைக்கு இணங்கும்படி தனது மருமகளை வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாலம்மா, கத்தி கூச்சலிட்டு தன்னை காப்பாற்றுமாறு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமலிங்கையா, ஜாலம்மாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த அடைந்த ஜாலம்மா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலிங்கையா, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதற்கிடையே ஜாலம்மாவின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ஜாலம்மா சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஜாலம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராமலிங்கையாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read more: “விஜய்யை பிரிந்து சென்ற சங்கீதா…” பத்திரிகையாளர் அளித்த பரபரப்பு பேட்டி.. சோகத்தில் ரசிகர்கள்..