இப்படி ஒரு தந்தையா? பணத்துக்காக 12 வயது மகளை... விஷயம் தெரிந்த போலீஸ்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 வயது சிறுமியை 72 வயது முதியவர் திருமணம் செய்வதை சார்சத்தா மாவட்ட போலீசார் தடுத்து மணமகனை கைது செய்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருந்தாலும் முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்ற நபர், 72 வயது முதியவர் ஆன ஹபீப் கான் என்பவரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு தனது மகளை விற்று உள்ளார்.
அந்த முதியவர் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற போது தகவலறிந்து சென்ற போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். உடனே சிறுமியின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் முதியவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 72 முதியவர் மற்றும் திருமண நிகழ்ச்சியை நடத்தி வைக்க முயன்ற நபர் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் இருந்தும், cச்ச்ச்ச் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில், சட்ட அமலாக்க முகவர் ராஜன்பூர் மற்றும் தட்டாவில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை நிறுத்தியுது குறிப்பிடத்தக்கது.
Read more ; இதுக்கு ஒரு முடிவே இல்லையா!! ‘மனித விரலை அடுத்து ஐஸ்கிரீமில் கிடந்த பூரான்’ தீர்வு தான் என்ன?