முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாய்களை விட்டு கடிக்க வைத்து.! மகளின் காதலனுக்கு வரவேற்பு கொடுத்த கொடூர தந்தை.! வைரல் வீடியோ.!

02:05 PM Dec 10, 2023 IST | 1newsnationuser4
Advertisement

பிரிட்டனைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் காதலன் அவரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது நாய்களை வைத்து கடிக்கச் செய்த கொடூர சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இங்கிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தின் மூலமாக பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

#Britain #dog attack #cruel pic.twitter.com/uxdnssx7lK

— daemon targariyen (@daemon_targar) December 10, 2023

அப்போது அந்தப் பெண் தனது காதலனை வீட்டிற்கு வருமாறு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காதலியை சந்திப்பதற்காக அந்த இளைஞரும் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது மகளின் காதலன் வீட்டிற்கு வருவதை கண்டு ஆத்திரம் அடைந்த தந்தை தனது நாயை ஏவி விட்டு அந்த இளைஞரை கடிக்கச் செய்திருக்கிறார்.

அவரது நாய் அந்த இளைஞரை ஆவேசமாக தாக்குவதையும் அதனால் அந்த இளைஞர் துடிப்பதையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்திருக்கிறார் அந்த கொடூரத் தந்தை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Tags :
DaughterDog biteenglandloversocial media
Advertisement
Next Article