’’சரியான உணவு, நல்ல தூக்கம் கெடும் போது ரத்தக் குழாயில் கொழுப்பு’’..!! ரஜினிகாந்த் இனி இப்படித்தான் இருக்க வேண்டும்..!! மருத்துவர் அட்வைஸ்..!!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை நடித்து முடித்து தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினியின் அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரியதாக உள்ளதால், அதற்கான சிகிச்சை எடுக்கப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்தது. பின்னர், அதற்கான STENT பொறுத்தப்பட்டு சிகிச்சை முடிந்தது. சிகிச்சை முடிந்தாலும் ரஜினி ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 3 நாட்கள் சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், ரஜினி சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், ரஜினியின் நண்பரும், மருத்துவருமான சொக்கலிங்கம் அவரின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். ”ரஜினிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் செய்யப்பட்டது. 73 வயதாகும் ரஜினி, இனிதான் கவனமுடன் இருக்க வேண்டும். ரத்தக்குழாயில் கொழுப்பு படிவது வழக்கமாக வயதாகும் போது ஏற்படும்.
அதனால் தூக்கமின்மை, சர்க்க அளவு மாற்றம், ரத்த அழுத்தம் நேரலாம். ரத்தக் கொழுப்பு அதிகரிக்க கவலை மட்டுமே காரணம் என கூறும் அவர், மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி தான் தேவை. சரியான உணவு, நல்ல தூக்கம் கெடும் போது ரத்தக் குழாயில் கொழுப்பு சேரும். அதுதான் தற்போது, ரஜினிக்கு நடந்துள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்ததால் தற்போதைய காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக STENT பொறுத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தற்போது மது குடிப்பதில்லை. புகைப் பழக்கம் இல்லை. மருத்துவர்கள் அறிவுரையை கடைபிடிக்கும் நபர் என்பதால், அவருக்கு பிரச்சனை ஏதும் இல்லை” என கூறியுள்ளார்.
Read More : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா..? 4 நாட்கள் சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!