For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாரத்திற்கு 2 முறை விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மேஜிக்..!! நீங்களும் இப்படி கடைபிடித்து பாருங்க..!!

Fasting 2 times a week provides unbelievable benefits to our body.
05:10 AM Sep 19, 2024 IST | Chella
வாரத்திற்கு 2 முறை விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் மேஜிக்     நீங்களும் இப்படி கடைபிடித்து பாருங்க
Advertisement

வாரத்திற்கு 2 முறை விரதம் இருந்தால், நமது உடலுக்கு நம்ப முடியாத அளவுக்கு நன்மைகளை வழங்குகிறது. ஆகவே, இந்த பதிவில் விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

Advertisement

பொதுவாகவே விரதம் இருப்பதால், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி ரத்த சர்க்கரை அளவுகளை சீராக்குவதன் மூலமாக வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. நமது உடலில் கலோரி குறைபாடு ஏற்பட்டு, அதனால் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதன் விளைவாக உடல் எடை குறைகிறது. மேலும், உடலில் சேமிக்கப்பட்டு இருந்த கொழுப்பு பயன்படுத்தப்படுகிறது.

பல நபர்களுக்கு விரதம் இருப்பது மன தெளிவை அளிக்கும். இதற்கு முக்கிய காரணம் ரத்த சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுவதும், வீக்கம் குறைக்கப்படுவதாலும் தான். செல்களில் உள்ள சேதமடைந்த கூறுகள் அகற்றப்பட்டு அவை புதுப்பிக்க உதவும் ஆட்டோபேஜி என்ற செயல்முறையை விரதம் தூண்டுகிறது. இதனால், உங்களுடைய ஆயுள் அதிகரித்து நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

விரதம் இருப்பதால் நமது உடலில் வீக்கம் குறைகிறது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பலன் அளிக்கிறது. ஏனென்றால், பல நோய்கள் வீக்கம் காரணமாகவே ஏற்படுகின்றன. விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்த அழுத்தம் குறைந்து, கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளும் குறைகிறது. இதனால் இதயத்தின் ஆரோக்கியமாகிறது.

விரதத்தை சரியான முறையில் எப்படி மேற்கொள்வது..?

விரதத்திற்கு சிறந்த ஒரு முறையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக 16/8 முறையில் 16 மணி நேரம் நீங்கள் விரதத்திலும், 8 மணி நேரத்தில் சாப்பிடவும் செய்யலாம் அல்லது முழு நாள் விரதத்தை கடைபிடிக்கலாம். உதாரணமாக 5 நாட்கள் வழக்கமாக சாப்பிட்டு விட்டு இரண்டு நாட்கள் மட்டும் விரதம் கடைபிடிக்கலாம். குறிப்பாக, விரதம் இருக்கும்போது உங்கள் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அதற்கு நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவங்களை பருகுங்கள். ஹெர்பல் டீ மற்றும் பிளாக் காபி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். விரதம் இருக்காத நாளில் அதிகப்படியாத சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிலர் விரதம் இருந்த அடுத்த நாள் அதிக உணவை சாப்பிடுவார்கள். இது ஆரோக்கியமற்ற பழக்கம் ஆகும். அது மட்டுமல்லாமல் விரதத்தால் உங்களுக்கு கிடைத்த பலன்களை போக்க வாய்ப்பு உள்ளது. மேலும், உடல் எடை அதிகரிக்கலாம்.

Read More : இந்தியன் ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.35,400..!! பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

Tags :
Advertisement