முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முடிவுக்கு வருகிறது FASTag!… கணக்கை உடனடியாக மூட பேடிஎம் அறிவுறுத்தல்!

08:29 AM Mar 11, 2024 IST | 1newsnationuser3
Advertisement

FASTag: புதிய சேவையை பெறவேண்டுமானால் உடனடியாக FASTag கணக்கை மூட வேண்டும் என்று பேடிஎம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) Paytm Payments செயல்பாட்டை முற்றிலும் தடை செய்திருக்கிறது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 ன் பிரிவு 35A இன் கீழ் அதன் அதிகார வரம்பிற்கு ஏற்ப, Paytm Payments Bank (PPBL) புதிய வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதை ஆர்பிஐ தடை செய்துள்ளது. மேலும், மார்ச் 15, 2024க்குப் பிறகு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்டு கார்டுகள், Paytm Wallets, FASTags, NCMC கார்டுகள் போன்றவற்றின் டெபாசிட்கள், கிரெடிட் பரிவர்த்தனைகள், டாப்-அப்கள் இவற்றின் மூலம் செய்ய முடியாது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, மார்ச் 15க்குப் பிறகு, Paytm Payments வங்கியால் வழங்கப்பட்ட FASTags -ல் டாப்-அப்கள் அனுமதிக்கப்படாது. உங்களின் Paytm Fastag-ஐ, குறிப்பாக FASTagல் பேலன்ஸ் எதுவும் இல்லை என்றால் மார்ச் 15, 2024க்கு முன் மூடிவிடுங்கள். ஆர்பிஐ அங்கீகரித்திருக்கும் மற்றொரு தரப்பிடம் இருந்து புதிதாக Fastag -கணக்கை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏதேனும் பேலன்ஸ் பேடிஎம் பாஸ்டேக்கில் இருந்தால், தொகையை முடிக்கும் வரை அதைப் பயன்படுத்தலாம். அது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதேநேரத்தில், உங்கள் Paytm FASTag -ஐ மூட குறைந்தது 5-7 நாட்கள் ஆகும். செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் மினிமம் பேலன்ஸ் உங்கள் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் வாலட்டில் திருப்பி அளிக்கப்படும். சிலர் 10 நாட்கள் வரை ஆவதாகவும் எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளனர்.

Paytm Payments வங்கியால் வழங்கப்பட்ட FASTag - மூட விரும்பினால் கட்டணமில்லா எண்: 1800-120-4210 -ஐ அழைத்து, வாகனப் பதிவு எண் (VRN) அல்லது டேக் ஐடியுடன், பதிவு செய்யப்பட்டுள்ள உங்கள் மொபைல் எண்ணை கூறவும். இதன்பின்னர், பேடிஎம் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர் ஆதரவு முகவர் உங்களைத் தொடர்புகொண்டு FASTag மூடப்பட்டதை உறுதிப்படுத்துவார்.

Paytm ஆப் மூலம் Paytm FASTag -ஐ மூடுவது எப்படி? உங்கள் Paytm கணக்கில் Login செய்யவும். அதில் 'FASTag' ஐ கிளிக் செய்யவும். ‘Manage FASTag’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கீழே ஸ்க்ரோல் செய்து ‘Help & Support’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ‘Need help with non-order related queries' என்பதை தேர்வு செய்யவும். அதில் 5-6 தீர்வுகள் காட்டப்படும். அதில் ‘I want to close my FASTag’ என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும். FASTag கணக்கைத் தேர்ந்தெடுத்து, மூடுவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும். அக்கவுண்ட் மூடப்பட்டவுடன், உங்கள் தொகை வங்கி கணக்குக்கு திருப்பி அளிக்கப்படும்.

Readmore: Oscars 2024: விருது வழங்க நிர்வாணமாக சென்ற ஜான் சினா!… வைரலாகும் வீடியோ!

Tags :
paytmகணக்கை உடனடியாக மூடுங்கள்பேடிஎம் அறிவுறுத்தல்முடிவுக்கு வருகிறது FASTag
Advertisement
Next Article