கிரிக்கெட் தான் என் முதல் காதல்.. உருக்கமான பதிவுடன் ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர்..!!
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளராக இருந்த வருண் ஆரோன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்து இருக்கிறார். அவருக்கு வயது 35. தற்போது நடைபெற்று வரும் 2024-25 விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் ஜார்கண்ட் அணிக்காக ஆடினார். அத்துடன் தனது கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்ள அவர் முடிவு செய்து இருக்கிறார்.
வேகப் பந்துவீச்சாளராக இருப்பதால் பல முறை காயங்களையும் எதிர்கொண்டு இருக்கிறார். இனியும் கிரிக்கெட்டில் தொடர்வது கடினம் என்ற நிலையில் அவர் ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருக்கிறார் வருண் ஆரோன். இனி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட உள்ளதாக அவர் கூறினார்.
இந்திய அணியில் வருண் ஆரோன் : இந்திய அணிக்காக 2011 இல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான வருண் ஆரோன், 9 டெஸ்ட் போட்டிகளிலும், 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 18 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 11 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 103 இன்னிங்ஸ்களில் 173 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இந்திய அணிக்காக கடைசியாக 2015 ஆம் ஆண்டில் விளையாடி இருந்தார் வருண் ஆரோன். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி ஆடி வந்தார். அவர் உள்ளூர் போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெல்லி மற்றும் பரோடா ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவர் 52 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளில் வருண் ஆரோன் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more :14 வயதில் கல்யாணம்.. குழந்தை வேற இருக்கு.. கள்ளக்காதலனுடன் ஓடிய சிறுமி..!! விசாரணையில் பகீர்..