விவசாயிகளே..!! இனி உங்க அக்கவுண்ட்டுக்கு ரூ.12,000 வரப்போகுது..!! மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரை..!!
2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் நடைபெற்றது.
விவசாய அமைப்புகளின் முக்கிய கோரிக்கைகள் :
இதில், விவசாயிகள் அமைப்புகளின் மிக முக்கியமான கோரிக்கைகளில், பிஎம் கிசான் சம்மன் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கோரிக்கையாகும். பிஎம் கிசான் சம்மன் நிதியை ரூ.6,000-லிருந்து ரூ.12,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சிறு விவசாயிகளையும் பிரதான் மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வர நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படும் நிலையில், இந்த தொகையை அதிகரிக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் தலைமையிலான வேளாண், கால்நடைத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ரூ.12,000 ஆக அதிகரிக்க மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
Read More : சினிமாவுக்கு முழுக்கு..!! பிரபல அரசியல் கட்சியில் இணையும் கீர்த்தி சுரேஷ்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!