For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விவசாயிகளே!. கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.420 உயர்வு!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

06:24 AM Dec 21, 2024 IST | Kokila
விவசாயிகளே   கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 420 உயர்வு   மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Advertisement

Copra Coconut: 2025ம் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 420 முதல் ரூ.12,100 வரை உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று கூடியது. அதில், வரும் ஆண்டில் கொப்பரை தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.422 உயர்த்தியது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், இதற்காக பட்ஜெட்டில் ரூ.855 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரைக்கும் கொப்பரை தேங்காய்க்கான விலையும் குவிண்டாலுக்கு ரூ.422 அதிகரித்து ரூ.11,582 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக

"விவசாயிகளின் நலனுக்காக தொடர் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது எங்களின் அர்ப்பணிப்பு, விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பிரதமரின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது… நம் நாட்டில், கொப்பரை உற்பத்தியில், கர்நாடகா தான் அதிக பங்கு வகிக்கிறது. …கொப்ரா கொள்முதல் செய்வதற்கு, NAFED மற்றும் NCCF ஆகிய இரண்டும் மத்திய நோடல் ஏஜென்சிகளாக இருக்கும், இது தவிர, மாநில அரசுகளுக்கு இதில் பெரிய பங்கு இருக்கும் என்று கூறினார்.

Readmore: அஸ்வின் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை!. 2024-ல் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற நட்சத்திர வீரர்கள்!

Tags :
Advertisement