முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING : "டெல்லி நோக்கி செல்வோம்" பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு...!

06:56 AM Feb 19, 2024 IST | 1newsnationuser2
Advertisement

டெல்லி நோக்கி செல்வோம்" பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஆனால், மத்திய அரசு அதை நிறைவேற்றவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்து கடந்த 13-ம் தேதி போராட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரண்டு மத்திய அமைச்சர்கள் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.‌

நேற்று விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நள்ளிரவு 1 மணி வரை 4 வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. மத்திய அரசு முன்வைத்த திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். "டெல்லி நோக்கி செல்வோம்" பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 2 நாட்களுக்கு பிறகு டெல்லி சலோ போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
central govtDelhifarmersProtest
Advertisement
Next Article