அம்மாடியோ.. எகிறி அடிக்கும் பூண்டு விலை.. ஒரு கிலோ ரூ. 450-க்கு விற்பனை..!! இல்லத்தரசிகள் ஷாக்..
கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, நீர் நிலைகளில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி இருக்கிறது. குறிப்பாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் காய்கறிகள், பூக்கள், வெங்காயம் உள்ளிட்டவை அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனால் தேனி, திண்டுக்கல், நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல், காய்கறி, வாழை உள்ளிட்ட உணவு பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும் கடும் இன்னலை சந்திக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளைக்கு 100 முதல் 110 லாரிகளில் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருகிறது. மேலும் வெயில் மற்றும் மழை என மாறி மாறி வருவதால் வெங்காயம் அழுகி விடுகின்றன. இந்த நிலையில் காய்கறி சந்தையில் வெங்காயம் உள்ளிட்ட பல காய்கறிகள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பூண்டு 450 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் சில்லறை விற்பனையில் 500 ரூபாயை தாண்டி விற்பனையாவதாகக் கூறப்படுகிறது. இதோ போல ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 90 ரூபாயை கடந்துள்ளது. வெளிச்சந்தையில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.
சின்ன வெங்காயம், இன்று 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் இதன் விலை தரத்தை பொறுத்து 120 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஒரு கிலோ கேரட் 100 ரூபாய்க்கும், இஞ்சி 220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய் 120க்கும். உருளைக்கிழங்கு 80 ரூபாய்க்கும், விற்பனையாகிறது. கத்தரிக்காய் 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 75 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
Read more ; அதிகளவு உடற்பயிற்சி..!! காதில் ரத்தம்..!! ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!