விவசாயிகளே..!! வந்தாச்சு ரூ.2,000..!! உங்கள் வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க..!!
பிஎம் கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தலா ரூ. 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 கிடைக்கும். இந்நிலையில், இதுவரை 16 தவணைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாரணாசியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 17-வது தவணையாக ரூ.2,000 வரவு வைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விவசாயிகளுக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பப்படுகிறது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2,000 பணம் வந்துவிட்டதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
Read More : Watch Video | முன்னாள் காதலியை துடிதுடிக்க ஸ்பேனரால் அடித்துக் கொன்ற இளைஞர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!