முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'என் காட்சிகளை எடிட்டர் கட் செய்கிறார்' குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகும் ஃபரினா! நடந்தது என்ன?

07:06 PM May 28, 2024 IST | Mari Thangam
Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களுக்கு மத்தியில் பெரிய ஹிட் ஆன நிலையில், குக் வித் கோமாளி 5ம் சீசன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சமீபத்தில் தொடங்கியது.

Advertisement

செஃப் வெங்கடேஷ் பட் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக விஜய் டிவி கொண்டு வந்திருக்கிறது. வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் இந்த சீசனில் நடுவராக வரவில்லை என்பதே ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் மற்றவர்கள் இருப்பதால் இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பு பார்த்தனர். பழைய கோமாளிகள் உடன் புது கோமாளிகளும் பல பேர் ஷோவில் இணைந்து இருக்கின்றனர்.

இந்த சீசனில் சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்‌ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கிறார்கள்.கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து புகழ்பெற்ற ஃபரினா அசாத் இந்த சீசனில் கோமாளியாக வந்திருக்கிறார். அந்த வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்ச்சியாக இருந்தாராம், ஆனால் அவரது காட்சிகளை எடிட்டர் வெட்டிவிடுவதால் தனக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என கோபமாக அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இதனால் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜாலியாக ரீல்ஸ் செய்து வீடியோ பதிவிட்டாரா? இல்லை கோபமாக பதிவிட்டுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://www.instagram.com/reel/C7d-Th0yOqk/?utm_source=ig_web_button_share_sheet

Tags :
Cook with KomalieditorFarinaInstagram reelsQuits Cook With Komali Season 5season 5social mediatrendingvijay tv
Advertisement
Next Article