For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விடைபெற்றனர் இருபெரும் வீரர்கள்!. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு!.

Virat Kohli, Rohit Sharma retired from international T20 matches!
06:12 AM Jun 30, 2024 IST | Kokila
விடைபெற்றனர் இருபெரும் வீரர்கள்   சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி  ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு
Advertisement

Virat kohli - Rohit sharma: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் விராட் கோலி, அக்சர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பெற்றுள்ளது. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.

இதனைத் தொடர்ந்து பேசிய விராட் கோலி, டி20 உலகக்கோப்பை வென்றது மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், இந்த மகிழ்சியோடு இந்த பார்மேட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். அடுத்ததாக இளம் தலைமுறைக்கு வழிவிடும் வகையில் 20 ஓவர் பார்மேட்டில் இருந்து இன்றோடு விடைபெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

ஓய்வு குறித்து விராட் கோலி பேசும்போது, " இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை. இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 ஆட்டம் இதுதான். டி20 உலகக்கோப்பையை அடைய விரும்பினோம். அது நடந்திருக்கிறது. என்னுடைய ஓய்வு என்பது ஒரு வெளிப்படையான ரகசியம். நாம் தோற்றாலும் நான் அறிவிக்கப் போவதில்லை. அடுத்த தலைமுறை T20 விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் சென்று ஐபிஎல்லில் அவர்கள் செய்ததைப் போல அற்புதங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது.

அவர்கள் இந்திய கொடியை உயர்த்தி இந்த அணியை இனி இங்கிருந்து மேலும் கொண்டு செல்வார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஐசிசி போட்டியில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். இது நான் மட்டும் அல்ல. ரோஹித் போன்ற ஒருவரைப் பாருங்கள், அவர் 9 டி20 உலகக் கோப்பைகளை விளையாடியுள்ளார், இது என்னுடைய ஆறாவது உலகக் கோப்பை.

அணியில் உள்ள மற்ற எவரையும் போலவே அவரும் இந்த சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர். எங்களால் இந்த வேலை சிறப்பாக செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி. நான் என்ன மாதிரியான மனநிலையில் இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். கடந்த சில ஆட்டங்களில் எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. நான் அந்த போட்டிகளின்போது நன்றாக உணரவில்லை. இது ஒரு அற்புதமான நாள். இந்த நாளை மறக்க முடியாது." என உணர்ச்சி பொங்க பேசினார். அத்துடன் டி20 உலகக்கோப்பையை ஏந்தி இந்த பார்மேட்டுக்கு விடை கொடுத்தார்.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். 2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதன் முடிவில் இரண்டு இந்திய ஜாம்பவான்கள் ஓய்வை அறிவித்து உள்ளனர். மேலும், டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் அறிவித்தார்.

Readmore: குட் நியூஸ்…! 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 15-ம் தேதி வரை நேரடி சேர்க்கை…!

Tags :
Advertisement