For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு..! தமிழகத்தில் முதல் கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் அமல்..!

NHAI hikes toll tax across highways by 5 per cent from June 3
01:25 AM Jun 03, 2024 IST | Kathir
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு    தமிழகத்தில் முதல் கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் அமல்
Advertisement

TOLL GATE: இந்தியா முழுவதும் உள்ள 1,182 க்கும் சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், அதில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை (அதாவது ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம்) தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்(NHAI) மாற்றி அமைக்கப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடுவரை கட்டணம் உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண உயர்வு இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று (நள்ளிரவு 12 மணி) முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்ட்டுள்ளது. அதேபோல் கல்லகம் – கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி, திருச்சி – கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 70 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப 110 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 2 ஆயிரத்து 395 ரூபாய் என புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இலகுரக சரக்கு வாகனங்கள் போன்றவைகளுக்கு ஒருமுறை பயணம் செய்ய 115 ரூபாயும், ஒரே நாளில் சென்று திரும்ப 175 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மேலும் பேருந்து, சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 245 ரூபாயும், ஒரேநாளில் சென்று திரும்ப 365 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 அச்சுகள் கொண்ட வர்த்தக வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 265 ரூபாயும், ஒரேநாளில் சென்று திரும்ப 400 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4 சக்கர, 6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய 380 ரூபாயும், ஒரேநாளில் சென்று திரும்ப 570 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement