முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெடி சத்தம்.. பயந்து ஒடிய பரியேறும் பெருமாள் புகழ் கருப்பி நாய் வண்டி மீது மோதி உயிரிழப்பு..!!

Fans are shocked by the death of the black dog who starred in Pariyerum Perumal.
07:45 PM Nov 01, 2024 IST | Mari Thangam
Advertisement

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி நாய் உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமாக உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, இயக்குநர் மாரிமுத்து, பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த அனைவருடைய கதாபாத்திரமும் பிரபலமானதை போலப் படத்தில் கருப்பி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டிருந்த சிப்பிப் பாறை வகை இனத்தைச் சேர்ந்த நாயும் பிரபலமானது. 

அந்த கருப்பி படத்தின் கதையோட்டத்தை உணர்ச்சிப்பூர்வமான கட்டத்திற்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தது. இதனால் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கருப்பி எனும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி கதாபாத்திரத்தில் நடித்த செல்லப்பிராணி உயிரிழந்துள்ளது. படத்தில் அந்த கருப்பி நாய் இறப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சியில் ஒப்பாரி பாடலையும் வைத்தது உண்மையில் மக்களைக் கவலையில் ஆழ்த்திக் கண்கலங்க வைத்தது.

இந்த சூழலில், உண்மையிலே அந்த நாய் தற்போது உயிரிழந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் வெடி சத்தத்தை கேட்டு தெறித்து ஓடிய கருப்பி நாய் சாலையில் வந்த வண்டி மீது மோதி உயிரிழந்துள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

Read more ; வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவம்பரில் வெளுக்க போகும் கனமழை..!! தப்பிக்குமா தமிழகம்?

Tags :
Pariyerum Perumalகருப்பி நாய்
Advertisement
Next Article