For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகையை பலாத்காரம் செய்த பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்..!! பாய்ந்தது பாலியல் வழக்கு..!! நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டல்..!!

A case of sexual assault has been registered against popular YouTuber Harsha Sai.
04:32 PM Sep 25, 2024 IST | Chella
நடிகையை பலாத்காரம் செய்த பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்     பாய்ந்தது பாலியல் வழக்கு     நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டல்
Advertisement

பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம் நர்சிங்கி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில், நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடிகையின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் ஹர்ஷா சாய் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த மும்பையைச் சேர்ந்த 25 வயது நடிகை ஒருவர், ஹர்ஷா சாய் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து, அந்த பெண், மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், ஹர்ஷா சாய் இதுவரைக் கைது செய்யப்படவில்லை.

காவலர்கள் கூற்றுப்படி, நடிகை மற்றும் ஹர்ஷா சாய்க்கு பொதுவான நண்பரின் பார்ட்டியில் இருவரும் சந்தித்து ஒருவருக்கொருவர் அறிமுகமாகியுள்ளனர். நாளடைவில் காதலிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக ஹர்ஷா சாய் ஆசைவார்த்தைக் கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணை பலாத்காரம் மற்றும் நிர்வாணமாகப் புகைப்படங்கள் எடுத்து மிரட்டியதாகவும் புகாரில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஆந்திர மாநிலம், விஜயநகரத்தைச் சேர்ந்த யூடியூபர். கல்லூரி படிப்பு முடிந்ததும் உடற்பயிற்சி வீடியோக்களைப் பதிவிட்டு யூடியூபுக்குள் நுழைந்தவர், வைரலாவதற்காக பல கன்டென்ட்களை பதிவிட்டு வந்தார். 4 லட்ச ரூபாய் காரை முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்குவது, பேய் வீட்டில் தங்குவது என வெளிநாட்டு சேனல்களில் பிரபலமான வீடியோக்களை உள்ளூரில் செய்து மக்களின் கவனத்தை பெற்றார்.

பின்னாளில், ஏழைகளை நட்சத்திர ஹோட்டலில் தங்க வைப்பது, ஏழை மாணவருக்கு சைக்கிள் வாங்கி கொடுப்பது, விவசாயிக்கு வீடு கட்டிக்கொடுப்பது, ஆயிரம் பேருக்கு டேங் ஃபுல்லாக பெட்ரோல் போடுவது போன்ற வீடியோக்களால் மில்லியன் கணக்கான ஃபாலோவர்களை ஈர்த்தார். தெலுங்கில் இவர் எடுக்கும் வீடியோக்களை தமிழ், இந்தி மொழிகளில் டப் செய்தும் தனித்தனி சேனல்களில் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement