முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கேஜிஎஃப் துணிக்கடையில் சிறார்களை பணிக்கு அமர்த்திய பிரபல யூடியூபர்..!! பாய்ந்தது அடுத்த வழக்கு..!!

11:36 AM Nov 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் என்.என். கார்டன் பகுதியில் கேஜிஎஃப் என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி (எ) விக்னேஷ். இருவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 3 கடைகள் உள்ளன. சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர், 'துணிவு' படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்திற்காக சிறார்களை விக்கி கடையில் பணியில் அமர்த்தி இருப்பதாக தகவல் கிடைத்தது.

Advertisement

அதனடிப்படையில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்புக்குழு அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் மற்றும் வண்ணாரப்பேட்டை போலீசார், விக்கிக்குச் சொந்தமான 3 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் பணியில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொற்ப சம்பளத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக வேலை பார்த்து வந்துள்ளனர். 4 பேரில் ஒரு சிறுவன் மட்டும் தப்பியோடிவிட மற்ற 3 பேரையும் குழந்தைதள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்புக்குழு அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில், 14‌ வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைப் பணியில் அமர்த்திய குற்றத்திற்காக துணிக்கடை உரிமையாளர் விக்னேஷ் மீது வண்ணாரப்பேட்டை போலீசார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த விக்னேஷிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே விக்னேஷ் வியாபார போட்டி காரணமாக ரவுடிகளை ஏவி, சக கடை உரிமையாளரை தாக்கியதற்காக வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
எம்சி ரோடுசென்னைதுணிவு திரைப்படம்
Advertisement
Next Article