For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்...! சோகத்தில் திரையுலகினர்...

Famous playback singer P. Jayachandran passes away
05:46 AM Jan 10, 2025 IST | Vignesh
பிரபல பின்னணி பாடகர் பி ஜெயச்சந்திரன் காலமானார்     சோகத்தில் திரையுலகினர்
Advertisement

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

Advertisement

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார். ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement