முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பின்னணி பாடகி பி சுசீலா மருத்துவமனையில் அனுமதி..!! உடல்நிலை குறித்து வெளியான தகவல்..!!

Famous film playback singer B.Susheela has been admitted to a private hospital in Chennai due to sudden illness.
09:57 AM Aug 18, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 9 வகையான மொழிகளில் பாடல்களை பாடி மக்களின் மனதை கவர்ந்தவர் பி சுசீலா. இவர் மொத்தம் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியதால் பி சுசீலாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக பாடல்களை பாடியவர் என்ற பெருமைக்காக உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்டவற்றில் பி சுசீலாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் பி சுசீலா அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக பி சுசீலாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. பாடகி பி சுசீலாவுக்கு வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதாவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் நலமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more ; ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி இந்த பொருளும் கிடைக்கும்..!!

Tags :
admitted to a private hospitalB.SusheelaChennaifamous singer
Advertisement
Next Article