முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

லோகேஷ் கனகராஜ் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான ஆபாச படங்கள்.! ஹேக்கர்களின் கைவரிசை.! நடந்தது என்ன.?

11:42 AM Dec 13, 2023 IST | 1newsnationuser4
Advertisement

தமிழ் சினிமாவின் வெற்றியை இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கைதி மாஸ்டர் விக்ரம் மற்றும் லியோ திரைப்படங்களின் வெற்றியாள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

Advertisement

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தையும் சன் நியூஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Lokesh Kanagaraj’s Facebook account got Hacked…

Bayangara Yoga videos ah iruku😞 pic.twitter.com/g0HTTwOUAO

— Christopher Kanagaraj (@Chrissuccess) December 13, 2023

இந்நிலையில் இவரது பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக விரோதிகள் இவரது சமூக வலைதள பக்கத்தை ஹேக் செய்து அதில் ஆபாசமான யோகா வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர். மேலும் இவரது பெயரையும் மாற்றி வைரல் யோகா என பெயர் வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் சினிமா துறையில் இருப்பவர்களிடமும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே திரைத்துறை பிரபலங்களின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இது அவருக்கு பிடிக்காதவர்களின் சரியாக இருக்கலாம் எனவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
facebook accountHackedlokesh kanagaraj
Advertisement
Next Article