For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

18,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல நிறுவனம்..!! என்ன காரணம் தெரியுமா..? அதிர்ச்சி அறிவிப்பு..!!

Intel reported 1,24,800 employees last year. The announced layoffs are expected to result in the loss of around 18,000 jobs.
12:42 PM Aug 02, 2024 IST | Chella
18 000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல நிறுவனம்     என்ன காரணம் தெரியுமா    அதிர்ச்சி அறிவிப்பு
Advertisement

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், என்விடியா மற்றும் ஏஎம்டி ஆகியவற்றில் இருந்து பலத்த போட்டியை எதிர்கொண்டுள்ளது. நிறுவனத்தை தக்கவைக்க லே-ஆப் நடவடிக்கைககளை ஏற்கனவெ எடுத்தது. அத்துடன் 1.2 லட்சம் ஊழியர்களில் 15,000 முதல் 18,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

Advertisement

சமீபத்தில் முடிவடைந்த ஜூன் மாத காலாண்டில் இன்டெல் நிறுவனம், 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இழப்பை சந்தித்தது. நடப்பாண்டு சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ.83,000 கோடி மதிப்பிலான செலவைக் குறைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இன்டெல் நிறுவனம் கடந்தாண்டு 1,24,800 பணியாளர்களைக் கொண்டிருப்பதாக அறிவித்தது.

தற்போது அறிவித்துள்ள பணிநீக்க நடவடிக்கைகள் சுமார் 18,000 பேரின் வேலையை பறிக்கும் என கூறப்படுகிறது. இதற்காக பணியாளர்கள் தாமாக முன்வந்து வேலையை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இன்று முதல் சம்பவம் இருக்கு..!! வானிலை அலர்ட்..!!

Tags :
Advertisement