முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Breaking: பிரபல நடிகை ஆர்த்தி கணேஷ் பாஜகவில் இணைந்தார்...!

11:23 AM Apr 09, 2024 IST | Vignesh
Advertisement

பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர், ஆர்த்தி கணேஷ் பாஜகவில் இணைந்தார்.

நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் பாஜகவில் இணைந்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பயணித்து வருகிறார். திரைப்பட நகைச்சுவை நடிகர் கணேஷ் அவர்களின் மனைவியான ஆர்த்தி கணேஷ் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் இணைந்தார்.

Advertisement

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் நடிகை ஆர்த்தி கணேஷ் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் அதிமுகவுக்கு ஆதரவாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேற்று வரை அதிமுகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தன்னை இன்று பாஜகவில் இணைத்து கொண்டார்.

பாஜகவில் இணைந்த அவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர், ஆர்த்தி கணேஷ் அவர்கள், பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தலைமைப் பண்பாலும், நல்லாட்சித் திறனாலும் ஈர்க்கப்பட்டு, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டுள்ளார். அவரது பணி சிறக்க தனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article